Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

கோவில் திருவிழாவில் 10 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் அபகரிப்பு : பொலிஸில் முறைப்பாடு!



(மயூரன்)


வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அதன் போது , ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களில் ஐவரின் தங்க சங்கிலிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்ச ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »