Our Feeds


Saturday, February 19, 2022

ShortNews

A/L பரீட்சார்த்திகளிடம் அவசர கோரிக்கை விடுத்தது பரீட்சைகள் திணைக்களம்

 

தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை தொடர்பிலான போலி நேரஅட்டவணையொன்று இணையத்தளத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.


இதனால், பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் போலி அட்டவணை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் அனைத்து தினங்களிலும், காலை 8:30க்கு பரீட்சைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், வெள்ளிகிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை வேளைகளில் பிற்பகல் 1:00க்கு (13:00) பரீட்சைகள் ஆரம்பமாகும்.


 
வெள்ளிகிழமைகளில் மாத்திரம் பிற்பகல் 2:00 மணிக்கு (14:00) பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளது.

பரீட்சையுடன் தொடர்புடைய சரியான நேர அட்டவணையை, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பதிவிறக்க செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள :-

பாடசாலை பரீட்சை ஏற்பாட்டு கிளை : 011-2784208 / 011-2784537
அவசர தொலைபேசி இலக்கம் :- 1911
பெக்ஸ் :- 011-2784422


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »