Our Feeds


Saturday, February 19, 2022

ShortNews

அனுராதபுரத்தில் பெரமுனவிற்கு சவால் விடுகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டாம் ஆண்டை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள சல்காது மைதானத்தில் பேரணியை நடத்துவதற்கு அதன் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் பேரணியை நடத்திய அதே மைதானத்தில் பேரணியை நடாத்துவதற்கான சவாலை எதிர்கொள்ளும் வகையில் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் பேரணியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரஞ்சித் மத்தும பண்டார, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பேரணியை தொடர்ந்து கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »