Our Feeds


Friday, February 18, 2022

ShortNews

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திட்ட முன்னாள் ஜனாதிபதி..!



பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கையெழுத்துப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த கையெழுத்து போராட்டத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெற்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கிராமங்கள் தோறும் குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவும் த. தே. கூ. தலைவர் இரா. சம்பந்தனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க கோரி இன்று கையெழுத்திட்டனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »