பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள், கடமையிலிருந்த அதிகாரிகளை தாக்கி கலவரம் செய்துள்ளாா்.
இந்த சம்பவம் நேற்று இரவு மொரட்டுவை பிரதசத்தில் இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் வந்த மொரட்டுவை பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள், கடமையிலிருந்த சார்ஜன்ட் ஒருவருடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளாா்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சம்பந்தபட்ட அதிகாரியை கைதுசெய்துள்ளதாக மொரட்டுவை பொலிஸ் நிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளாா்.