தண்டிப்பதில் பெயர் போனவர் கிம் ஜாங் உன். இவர் மக்களைக் கொடுமைப்படுத்துவார். பிடிக்காதவர்களைக் கொல்வார். அண்டை நாடுகளை அச்சுறுத்துவார். தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த 12 ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் தான் இருக்கின்றன. இங்கு நடைமுறைப்படுத்தப்படும் விதிகள் கொடூரமானவை.
இந்தநிலையில், வட கொரியாவின் ஜனாதிபதியான கிம் ஜாங் உன், அவரது தந்தை கிம் ஜாங்கின் பிறந்த நாளை பெப்ரவரி 16ஆம் திகதி ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். பெப்ரவரி 16ஆம் திகதி கொண்டாடப்படும் பிறந்தநாளில் பொதுமக்கள் நாட்டின் முன்னோடி தலைவர் என்பதால் மரியாதை செலுத்த வர வேண்டும் என்பது கட்டாயம்.
இந்த நாளுக்கான ஏற்பாடாக தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்ட மலரான கிம்ஜாங்கிலியா என்கிற பெகோனியா தாவர வகையைச் சேர்ந்த மலர்கள் கொண்டு நிகழ்விடம் அலங்கரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இந்த ஆண்டு பூக்கள் சரியான நேரத்துக்கு மலரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜனாதிபதி கிம் ஜாங் உன், அங்கு பணிபுரிந்த தோட்டப் பணியாளர்களை 6 மாதத்திற்கு வதை முகாமிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
50 வயதான ஹான், சம்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர் தோட்டத்தின் மேலாளராக இருந்துள்ளார். கிம்ஜாங்கிலியா மலர்கள் மலர்வதற்கு போதுமான தட்பவெப்பநிலையும் ஈரமும் முக்கியமானது.
நாடு முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் இந்த மலர்ச் செடிகள் அமைந்திருக்கும் தோட்டங்கள் கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் பூக்களைச் சரியான நேரத்திற்கு மலரச் செய்ய இயலவில்லை எனத் தோட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதை ஏற்காத அதிகாரிகள், இது அவர்கள் பணியை ஒழுங்காக செய்யாததன் விளைவே என முடிவு செய்து வதை முகாமுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியின் தந்தை நினைவு நாளுக்கு மக்கள் யாரும் பொது இடத்தில் சிரிக்கவோ, மது அருந்தவோ, பொருட்கள் வாங்கவோ வெளியே செல்லக் கூடாது என 11 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.