Our Feeds


Saturday, February 12, 2022

SHAHNI RAMEES

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எதிர்கட்சிகள் கூட்டறிக்கை!

 

நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சி பிரதிநிதிகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசிம், ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன, லங்கா சமசமாஜ கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஆர்.சாணக்கியன், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.


 
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினை குறித்து, 4 பிரதான சவால்களை, எதிர்கட்சிகள் அடையாளம் காட்டியுள்ளன.

01.2020 ஏப்ரலில் இருந்து சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்தமையே இதன் மையக்கருமாகும்.


02.இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மாதாந்தம் தேவையான இறக்குமதிக்கு கூட போதுமானதாக இல்லாத காரணத்தினால், சுதந்திரத்திற்குப் பின்னர் மிகக் குறைந்த அந்நியச் செலாவணியை நாடு கொண்டுள்ளது.

03.2020 இல் பதிவு செய்யப்பட்ட அரசாங்க வருவாயில் 70 வீத கடன் வாங்குவது, இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வட்டி விகிதமாகும்.


 
04.கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்த பொதுக் கடனை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை உயர்த்தியமை ஆகியனவே 4 பிரதான காரணிகளாக காணப்படுகின்றன.

அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களை தாம் ஏற்றுக்கொள்வதுடன், இந்த நிர்கதியான தருணத்தில் நாடு என்ற விதத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பு வெற்றி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »