Our Feeds


Sunday, February 13, 2022

SHAHNI RAMEES

வவுனியாவில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

 

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இன்று (13) அதிகாலை 1 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டாரால் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(வுனியா நிருபர் )


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »