Our Feeds


Sunday, February 13, 2022

SHAHNI RAMEES

இளம் எம்.பி. கலந்துகொண்ட டீ.ஜே. நிகழ்ச்சியில் போதைப்பொருட்களுடன் ஏழு போ் கைது

 

அநுராதபுரம், தஹயாகம பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற டீ.ஜே. இசை நிழ்ச்சியில், அநுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் மற்றும் இருநூறு பேர் கலந்துகொண்டுள்ளனா். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏழு பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விருந்து ஒன்லைனினூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் 4,000 ரூபா பெறுமதியான LSD என்றழைக்கப்படும் போதைப்பொருள், 4,500 ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியன இவர்களிடமிருந்து கைபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 20 வயது முதல் 35 வயது வரை உள்ள 200 இற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

இந்த விருந்துபசாரத்தில் பங்குபற்ற ஒருவரிடம் 3500 ரூபா அறவிடப்பட்டதாகவும், உள்ளே நுழைந்த பின்னர் பணம் செலுத்தியவர்களை அடையாளம் காண்பதற்காக மஞ்சள் கையுறை அணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விருந்துபசாரத்தில் பங்குபற்றியதன் பின்னர் வியாபாரிகளிடமிருந்து பல்வேறு போதைப்பொருட்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளம் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியரும் விருந்தில் விருந்தினராக கலந்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. கித்சிறி ஜயலத் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன ஆகியோரின் பணிப்புரையின் பேரில் அநுராதபுரம் பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி கே. ஜயந்த புஷ்ப குமார தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »