Our Feeds


Saturday, February 12, 2022

SHAHNI RAMEES

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு !

 

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் செயற்பாடு கடந்த 2020 மார்ச் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் இலங்கைக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »