ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கும் வக்பு சபைக்கும் இடையில் நடந்த சனிக்கிழமை இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடலில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் பங்கு கொண்டிருந்தார். இதன் போது நீதி அமைச்சர் அலி சப்ரியும் குறித்த கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்தார் அப்போது வக்பு சபைத் தலைவரிடம் ஞானசார தேரரினால் சில விளக்கங்கள் கோரப்பட்டன.
நாட்டில் பல பகுதிகளில் வரலாற்று புகழ்வாய்ந்த ஸியாரங்கள் மூடப்பட்டுள்ளதாக சூபி முஸ்லிம்கள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியிடம் புகார் செய்துள்ளார்கள். இந்த ஸியாரங்கள் மீண்டும் திறக்கப்படவேண்டும் என ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் பதிலளிக்கையில் வக்பு சபைக்கென சில சட்ட ஒழுங்கு விதிகள் உள்ளன. அதன்மூலமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். முஸ்லிம்களுக்கிடையில் நிலவும் இவ்வாறான பிரச்சினைகளை நாங்களே கலந்து பேசி தீர்த்துக் கொள்கிறோம். எங்களுக்குள் நிகழும் இவ்வாறான சிறிய பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
நன்றி: விடிவெள்ளி