Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

VIDEO: ஞானசார தேரர் & ரதன தேரருக்கு குழந்தைகள் இருக்கிறார்கள், நானே என் கண்ணால் கண்டிருக்கிறேன். ஞானசாரர் & ரதன தேரரின் கட்சித் தலைவர் சமன் பெரேரா சர்ச்சை பேச்சு!


பிரபல ஊடகவியலாளர் ஷமுதித சமரவிக்கிரம நடத்தி வரும் யூடியுப் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபே ஜனபல பக்ஷய கட்சியின் தலைவர் சமன் பேரேரான அவர்கள் பல திடுக்கிடும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


குறித்த நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்டுள்ள சமன் பெரேரே அவர்கள்,


தான் மத குருக்களை மிகவும் மதிப்பவன் என்றாலும் அதுரலியே ரத்ன தேரரையோ, ஞானசார தேரரையோ நான் மதிக்க மாட்டேன். ஏனெனில்  அவர்களின் பன்சலைகளுக்குள்ளிருந்தே பல விஷயங்களை பார்த்திருக்கிறேன். அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி மதிக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார்.


குறித்த நிகழ்ச்சியில் குறுக்கிட்டு கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஷமுதித சமரவிக்கிரம அவர்கள் நீங்கள் குறித்த மத குருக்களை மதிக்காமைக்கான காரணம் என்ன என வினவிய போது பல திடுக்கிடும் செய்திகளை சமன் பெரேரா ஊடகத்தின் முன் வெளிப்படுத்தியுள்ளார்.


குறித்த மத குருமாருடன் நான் இருந்திருக்கிறேன். அவர்கள் மதகுருக்களுக்கான ஆடையை அணிந்து கொண்டு சாதாரண பொது மக்களை போல் வாழ்பவர்கள். அவர்களை கும்பிடும் அளவுக்குண்டான நபர்களாக அவர்கள் இல்லை. 


குறித்த மதகுருமார்கள் திருமணம் செய்யா விட்டாலும் அவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். குறித்த மதகுருமாரின் பன்சலைகளுக்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளை அழைத்து முறைப்படி விசாரனை நடத்தினாலே இவை அனைத்தும் ஆதாரத்துடன் வெளிவரும். குறித்த பன்சலைகளுக்கு எந்தெந்த பெண்கள் வருகிறார்கள் என்பதும், எத்தனை பிள்ளைகள் வருகிறார்கள் என்பதும் தெரியவரும். இதனை நான் பொறுப்புணர்வுடன் நானே பொறுப்பெடுத்தே கூறுகிறேன் என்றார்.


இதே வேலை நிகழ்வின் இடையில் குறுக்கீடு செய்த சமுதித சமரவிக்கிரம “அவர்கள் பன்சலைக்கு வணக்க வழிபாட்டுக்காக வந்து செல்லும் பெண்களாக இருக்கலாம்” என கேள்வியெழுப்பிய நிலையில்,


இரவு 11 மணி 12 மணி 03 மணி 04 மணிக்கெல்லாம் வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதற்காக பெண்கள் வந்து செல்கிறார்கள்? என சமன் பெரேரா பதிலை கேள்வியாக எழுப்பினார்.


இதையெல்லாம் நீங்கள் பார்த்தீர்களா? என்ற சமுதிதவின் கேள்விக்கு “நான் அங்குதானே இருந்தேன். நான் மட்டுமல்ல இவற்றை பார்த்த இன்னும் பலர் இருக்கிறார்கள். இவை அனைத்தையும் நானே பார்த்தேனே? என பதிலளித்தார் சமன் பெரேரா.


ஞானசார தேரர் என்பவர் நாங்கள் மிகவும் மரியாதை வழங்கிய ஒரு மதகுரு. ஆனால் அவருக்கு நெருக்கமாக இருந்து பழகும் போதுதான் பல விஷயங்கள் தெரிய வருகிறது. 


கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னாலும் எனது கட்சி செயலாளருக்கு பச்சை தூசனத்தில் திட்டுகிறார். அதன் ஆடியோ பதிவுகளும் என்னிடம் இருக்கிறது. 


ஞானசார தேரருக்கான பாராளுமன்ற உறுப்பினர் பொருப்பை ரத்ன தேரர் தான் வழங்க வேண்டும். அவரிடமிருந்து குறித்த பதவியை எப்படி பெற்றுக் கொள்வது என்பதை அவர் தான் அறிந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு என் தாயை இழுந்து பச்சை தூசனத்தில் திட்டினால் எல்லாம் சரியாகி விடுமா?


எனது தாய் உயிருடன் இல்லை. அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் ஞானசார தேரரிடம் அழைத்து சென்று நீங்கள் என் தாய்க்கு என்ன செய்வேன் என்று கூறினீர்களோ அதை என் கண் முன்னால் செய்து காட்டுங்கள் என கேட்டிருப்பேன். நான் பயப்பட மாட்டேன் என்றார் சமன் பெரேரா.


தனது செயலாளரின் தொலைபேசியில் ஞானசார தேரர் தூசன வார்த்தைகளில் பேசும் ஆடியோ பதிவு உள்ளதாகவும் தேவையென்றால் தன்னால் அதனை காட்ட முடியும் என்றும் கூறினார் சமன் பெரேரா.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »