பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்ட, தனக்கு மிகுதி சம்பள கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரி குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாபி சஹாப்தீனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணாவின் முன்னிலையில் இன்று (17) மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.