மஹரகம நகர சபையில் இன்று (17) இடம்பெற்று மாதாந்த சபைக் கூட்டத்தின்போது அமைதியின்மை நிலவியுள்ளது.
அதற்கமைய, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரை அழைப்பதற்கு நகரசபை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இன்று காலை பிரதேச மக்கள் சிலர் நகரசபை வளாகத்துக்கு வந்து சபைதலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனா். நேற்று முன்தினம் அந்த சபையின் உறுப்பினரான காந்தி கொடிக்காரவுக்கு சபைத் தலைவர் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்துக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளனா்.
அந்த பிரதேசத்திலுள்ள பெண்கள் சிலர் எதிர்ப்பு பதாதைகளுடன் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அதன் பின்னர் சபையினுள் நுழைவதற்கு முயற்சித்துள்ளனா்.
இருந்தபோதிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக மஹரகம பொலிஸ் அதிகாரிகள் நகரசபை வளாகத்துக்கு அழைக்க சபையின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் ஒரு மணிநேரத்துக்கு தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.