மடவளை வங்குவகடை பிரதேசத்தில் மண்திட்டு சரிந்து வீழ்ந்ததால் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த 4 பேர் மண்ணுள் புதைந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
இன்று பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றதை அடுத்து, பிரதேசவாசிகள், ஊரமக்கள் உடனடியாக செயல்பட்டு மண்ணைத் தோண்டி அவர்களை வெளியில் எடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலில் இரண்டு பேரை வெளியிலெடுத்து வைத்தியசாலைக்கு அனுப்பிய நிலையில் மேலும் கடுமையான போராட்டத்திதன் சுமார் ஒரு மணித்தியாலத்தில் மேலும் இருவரை வெளியில் எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
