Our Feeds


Saturday, February 19, 2022

ShortNews

மாணவிகளின் கழிப்பறையில் கெமரா - கம்பஹாவிலுள்ள பிரத்தியேக வகுப்புகளில் அதரடி பரிசோதனை - VIDEO



கம்பஹா நகரிலுள்ள சகல பிரத்தியேக வகுப்புகளிலும் தீடீர் பரிசோதனை மெற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்திலுள்ள பிரத்தியேக வகுப்பின் பெண்கள் கழிப்பறையில் இருந்து சி.சி.ரி.வி. கெமராவொன்று இனங்காணப்பட்டதையடுத்தே இந்த அதரடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அதற்கமைய, றேநற்று கம்பஹா நகரிலுள்ள பிரத்தியே மேலதிக வகுப்புகள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் இதன்போது அதிகளவான மாணவர்கள் கல்வி கற்கும் பிரத்தியேக வகுப்பகளிலுள்ள கழிப்பறைகளின் பாதுகாப்பு குறைப்பாடாக இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பிரத்தியேக வகுப்பில் மாடி படியினூடாக பயணிக்கும்போது கழிப்பறை தெரியும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா மாநகர சபையின் அதிகாரிகள், பொலிஸாா் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரினால் இந்த அதரடி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னுமொரு வகுப்பின் கழிப்பறைக்கு அருகில் சி.சி.ரி.வி. கெமரா பொறுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அநேகமான பிரத்தியேக வகுப்புகளிலுள்ள கழிப்பறைகளில் சுகாதார பாதுகாப்பு இருக்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மறுபதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட தனியார் கல்வி வகுப்புகளை தயார் செய்து, தெரிவிக்கும்படி, முகாமையாளர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »