Our Feeds


Wednesday, June 8, 2022

SHAHNI RAMEES

அவுஸ்திரேலியாவிற்கு 125 ஓட்டங்கள் வெற்றி இலக்கு....

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 125 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கேன் ரிச்சட்சன் 4 விக்கெட்களையும் மற்றும் ஜெய் ரிச்சட்சன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »