Our Feeds


Monday, June 13, 2022

ShortNews Admin

21வது திருத்தம் ஜனாதிபதி கோட்டாஷவுக்கு சாதகமாகவே உள்ளது! - பிரதமர் ரணில்!



(எம்.மனோசித்ரா)


அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு சாதகமாகவே உள்ளது. அது அவருக்கு பாதகமானதாக இல்லை.

எனவே அவர் அதனை ஆதரிப்பார் என்று நம்புகிறேன். அத்துடன் அவர் நிறைவேற்றதிகாரங்களை குறைத்துக் கொள்வதற்கு தயார் என்று மக்களுக்கு உறுதியளித்துள்ளார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வியோன்’ என்ற சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் ஊகிக்கின்றேன்.

21 ஆவது திருத்தம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்ட போது அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு தான் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தம் இன்னும் அவருக்கு சாதகமாகவே உள்ளது, பாதகமாக இல்லை.
முன்னதாக 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

எனினும் அமைச்சரவையில் தற்போது முன்வைக்கப்பட்ட வரைபுக்கு பாரிய பாதகமான எதிர்ப்புக்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »