Our Feeds


Monday, June 13, 2022

ShortTalk

நபிகள் நாயகத்தை நிந்தித்தவர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம்களின் வீடுகளை தகர்த்த இந்திய அரசாங்கம்!



இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம்கள் பலரின் வீடுகளை மாநில அரசாங்கம் தகர்த்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கலவரங்களில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வீடுகள் இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன.


நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளராக விளங்கிய நுபுர் சர்மா கருத்துத் தெரிவித்தமைக்கு எதிராக இந்தியாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன்போது சில இடங்களில் குழுக்களிடையே மோதல்கள் இடம்பெற்றதுடன், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலும் மோதல்கள் நடந்தன.

இது தொடர்பாக 300 இற்கும் அதிகமானோரை உத்தரபிரதேச பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கலவரங்களுடன் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முஸ்லிம் பிரமுர்கள் பலரின் வீடுகளை உத்தர பிரதேச மாநில அரசாங்கம் தகர்த்துள்ளது.

கட்டடங்களை தகர்க்குமாறு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார் என உத்தரபிரதேச பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியான ஜாவிட் அஹமத்தின் வீடும் தகர்க்கப்பட்டுள்ளது. அவரின் மகள் அப்ரீன் பாத்திமா, முஸ்லிம்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »