Our Feeds


Monday, June 13, 2022

ShortTalk

கொள்வனவு செய்யும்போதே செயலிழந்து காணப்பட்ட 3,100 மில்லியன் பெறுமதியான 50 ஜெனரேட்டர்கள்!



இலங்கை மின்சார சபையினால் 3,100 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 50 மின்பிறப்பாக்கிகள் - ஜெனரேட்டர்கள் கொள்வனவு செய்யப்படும்போதே செயற்படவில்லை என கோப் குழுவில் தெரிய வந்துள்ளது.


2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்ட ஜெனரேட்டர்களே இவ்வாறு செயலிழந்தவை என தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்குமாறு கோப் தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் அவற்றின் தற்போதைய செயற்பாடுகளை ஆராயும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் கோப் குழு கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »