Our Feeds


Saturday, June 11, 2022

SHAHNI RAMEES

மஹிந்த உட்பட 39 பேருக்கு எதிரான மனு ஜூலை 4 இல் பரிசீலிக்க தீர்மானம்...!

 



நாட்டில் நிலவும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் கூடிய நிலைமைக்கு காரணமானவர்கள் என கூறி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவினை எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான புவனேக அலுவிகாரே,பிரியந்த ஜயவர்தன,விஜித் மலல்கொட,மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழாம் இதற்கான தீர்மானத்தை அறிவித்தது.


கலாநிதி மஹீம் மென்டிஸ் உள்ளிட்ட திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மூவர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்து நேற்று (10) இதற்கான உத்தரவை நீதியரசர்கள் பிறப்பித்தனர்.

தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்கும்போது மத்திய வங்கியிடம் 7.6 பி;ல்லியன் டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தாக மனுதாரர்கள் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அரசாங்கம் கையாண்ட தூரநோக்கற்ற பொருளாதார செயற்றிட்டங்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கிய வரிச்சலுகைகள் உள்ளிட்ட கொள்கைகள் காரணமாக தற்போது நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலைமையை எதிர்க்கொள்வதாக மனுதாரர்கள் மனுவூடாக சுட்டிக்காட்டினர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »