Our Feeds


Thursday, June 9, 2022

ShortNews

மின் பொறியியலாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!



மின்சார பொறியியலாளர் சங்க தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர, அதன் ஏனைய உறுப்பினர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களால் நேற்று(08) நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாமென கோரியும், மின் விநியோகத்தை தொடர்ந்து வழங்க வேண்டியதன் அவசியத்தை கருத்திற்கொண்டும் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »