Our Feeds


Saturday, June 25, 2022

SHAHNI RAMEES

கிரெடிட் கார்ட்களுக்கான வட்டிவீதம் அதிகரிப்பு..!

 


இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கு (கிரெடிட் கார்ட்  ) அறவிடப்படும் வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தியுள்ளமை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

இதன்படி  சில வர்த்தக வங்கிகள் தமது  கிரெடிட் கார்ட்டுக்கான வட்டியை 30 சதவீதமாக அறிவித்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி,  கடன் அட்டைகள் மீதான அதிகபட்ச வட்டி வீத வரம்புகளை நீக்குவதாக அறிவித்ததை அடுத்து, கிரெடிட் கார்ட்  வட்டி  18% இலிருந்து 24% ஆக உயர்ந்த. இந்நிலையில் தற்போது வட்டி  30% ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாத இறுதியில் நாட்டில் செயல்பாட்டில் உள்ள மொத்த கிரெடிட் கார்ட்டுகளின் எண்ணிக்கை 1,973,481 ஆக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஏப்ரல் (2022) இறுதிக்குள் இந்த கிரெடிட் கார்ட்டுகளுக்கான மொத்தத் தொகை ரூ. 138,192 மில்லியன் ரூபாவாகும் எனவும் கூறப்படுகின்றது.

அதேபோல் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நாட்டில் செயல்பாட்டில் உள்ள (தேசிய பாவனா )கிரெடிட் கார்ட்டுகளின் எண்ணிக்கை 46,286 ஆக உள்ளதாகவும்,  இந்த  கிரெடிட் கார்ட்டுகளின் மொத்தத் நிலுவைத் தொகை  4.9 பில்லியன் எஹூபா எனவும் மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »