மக்களுக்கு ஜூலை மாதம் முதல் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 7500 ரூபாய் வழங்கப்படும் என்றார்.
உலக வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் ஊடாக இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொடுப்பனவுக்கு தகுதியானவர்களில் சமுர்த்தி பயனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவம் சார்ந்தவர்கள் அடங்குவர்.
