எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால்
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சபாநாயகர் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
