Our Feeds


Sunday, July 10, 2022

SHAHNI RAMEES

#JUST_IN: மீண்டும் எரிவாயு விலையை அதிகரிக்க லிட்ரோ நடவடிக்கை


 எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய போதிலும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவினால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 140,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »