ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒரு பாரிய குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு முக்கிய மதகுரு உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முஜிப் ரஹ்மான் அன்சாரி, அவரது காவலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் பள்ளிவாயிலை நோக்கிச் செல்லும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குண்டுவெடிப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
