நாட்டின் பல பகுதிகளில் வளியின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக இன்று (08) காலை 09.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
வளி தரக் குறியீட்டில் (AQI) முறையே 114 மற்றும் 117 ஆக பதிவாகியுள்ள பத்தரமுல்ல, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வளியானது மிக மோசமாக மாசடைந்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் (81), முல்லைத்தீவு (80), கேகாலை (87), மற்றும் தம்புள்ளை (84) ஆகிய இடங்களில் வளியின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை பகுதியில் வளித் தரக் குறியீட்டில் 44 மற்றும் 43 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் மாசுபட்ட வளியானது இலங்கையின் வளிமண்டலத் தொகுதிக்குள் நுழைந்துள்ளதாகவும், அதனால், இலங்கையின் வடக்குப் பகுதி மற்றும் சில பகுதிகள் தற்போது வளியின் தரத்தில் கடுமையான ஆரோக்கியமற்ற தன்மையை எதிர்கொள்வதாகவும் NBRO தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
