Our Feeds


Saturday, April 22, 2023

SHAHNI RAMEES

நீதிமன்றில் இருந்து 54 எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு...!

 

குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றின் களஞ்சிய அறையிலிருந்து வழக்குப் பொருட்களான 54 எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



இந்த எரிவாயு சிலிண்டர்களின் பெறுமதி 4,32,000 ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.



நீதவான் நீதிமன்றப் பதிவாளரால் குளியாப்பிட்டிய பொலிஸில் நேற்று (21) செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



இந்த எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்ட சரியான திகதி இன்னும் வெளியாகவில்லை.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »