Our Feeds


Saturday, April 22, 2023

ShortNews

பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு இலங்கை – ஓமல்பே சோபித தேரர் கடும் காட்டம்!



இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு வருடங்களாகிவிட்ட போதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான விடயம் என குறிப்பிட்டுள்ள ஓமல்பே சோபித தேரர் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என புத்தர் போதித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »