ருஹுனு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தெவிநுவர தெற்கு நகரத்தில் ராடார் அமைப்பை நிறுவுவதற்கு சீனாவுடன் எந்தவோர் உடன்பாடும் இல்லையென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
