Our Feeds


Thursday, May 11, 2023

Anonymous

எனக்கொரு வாய்ப்பை அரசாங்கம் தந்தால் “டெங்கு”வை என்ன செய்வேன் தெரியுமா? - மேர்வின் சில்வா

 



அரசாங்கம் எனக்கு ஒரு வாய்ப்பளித்தால் டெங்கு பரவலை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.


தனக்கு அதிகாரம் இருந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் இது குறித்து கலந்துரையாடி இருப்பேன் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

 “அரசியல்வாதிகள் திட்டங்களில் ஈடுபடுவதில்லை. இப்போதைய சுகாதார அமைச்சர் எனது நண்பர் தான். அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்த அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து அதிகாரிகளையும் வட்ட மேசை சந்திப்பில் கலந்து கொள்ள வைத்து டெங்குப்பரவலைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும்“ என அவர் தெரிவித்தார்.

“இந்தத் திட்டத்தை முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் வழங்க வேண்டும். நான் பதவியிலிருக்கும் போது அதைத் தான் செய்தேன். இப்போது டெங்கு ஒரு தொற்றுநோய் ஆகி விட்டது“ என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தை உடனடியாக கண்ணைத் திறந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மேவின் சில்வா வலியுறுத்தினார். அத்துடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தனக்கு வாய்ப்பளிக்குமாறும் அதற்கு எனக்கு எந்தப் பதவியும் வாகனங்களும் சம்பளமும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படவில்லையென்றால் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »