Our Feeds


Thursday, May 11, 2023

ShortTalk

பெற்றோரின் கவனத்திற்கு: சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பு - கல்லீரல் பாதிக்கப்படலாம் - மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை!



டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் கல்லீரல் பாதிப்பை தடுப்பதற்கு பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்ட சிறுவர், சிறுமிகளின்  மீண்டும் கடுமையான வேலையில் ஈடுபடுத்தினால், கல்லீரலில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"டெங்கு குணமானதும்  ஓரிரு வாரங்களுக்கு, சிறுவர், சிறுமிகளுக்கு  அதிக உடல் உழைப்பை கொடுக்காதீர்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டால், மூளையை பாதிக்கும். எனவே, டெங்குவை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். டெங்கு வந்தால் சிக்கல்கள் வரலாம்."

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் தற்போது லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »