Our Feeds


Sunday, May 21, 2023

Anonymous

அரபு லீக்கில் மீண்டும் இணைந்தது சிரியா - அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் என பிரகடனம்!

 



பிராந்­தியப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பத்தில் அர­பு­ நா­டுகள் ஒற்­று­மை­யாக செயற்­படுவது அவ­சியம் என அரபு லீக் உச்­சி­மா­நாட்டில் வெளி­யி­டப்­பட்ட ‘ஜெத்தா பிர­க­ட­னத்தில்’ கோரப்­பட்­டுள்­ளது. 


அத்­துடன் அரபு லீக்கில் சிரி­யாவை மீண்டும் இணைத்­த­மைக்கும் இப்­பி­ர­க­டனம் வர­வேற்பு தெரி­வித்­துள்­ளது. 

அரபு லீக்கின் 32ஆவது உச்­சி­மா­நாடு சவூதி அரே­பி­யாவின் ஜெத்தா நகரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. இம்­மா­நாட்டின் இறு­தியில் 'ஜெத்தா பிர­க­டனம்' வெளி­யி­டப்­பட்­டது.

பலஸ்­தீனப் பிரச்­சி­னை­களைத்  தீர்ப்­ப­தற்­கான அரபு சமா­தான முன்­மு­யற்­சி­களை இப்­பி­ர­க­டனம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. சூடானில் பதற்­றத்தை தணிக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. லெபனான் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு அவ­சி­ய­மான சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்ள அந்­நாட்டு ஜனா­தி­ப­தியை இப்­பி­ர­க­டனம் கோரி­யுள்­ளது. யேமனில் பாது­காப்பு, ஸ்திரத்­தன்­மையை ஊக்­கு­விப்­பற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரபு லீக் உச்சி மாநாட்டில் பங்­கு­பற்­றிய சிரிய ஜனா­தி­பதி பஷர் அல் அஸாத்தை அரபு நாடு­களின் தலை­வர்கள் வர­வேற்­றனர்.

சிரி­யாவில் ஜன­நா­யக ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளை­ய­டுத்து, அரபு லீக்­கி­லி­ருந்து 2011ஆம் அண்டு சிரியா இடை­நி­றுத்­தப்­பட்­டது. இம்­மாதம் அரபு லீக்கில் சிரியா மீண்டும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டது. 

அரபு லீக்கில் சிரியா மீள சேர்க்­கப்­பட்­டதை அமெ­ரிக்கா விமர்­சித்­தி­ருந்­தது. 

எனினும், அரபு லீக் செய­லாளர் நாயகம் அஹ்மத் அபோல் கெய்த் இக்­க­ரி­ச­னை­களை நிரா­க­ரித்­தி­ருந்தார்.

இதே­வேளை, சிரிய ஜனா­தி­பதி அஸாத்தின் அர­சாங்­கத்­துடன் அரபு லீக் உறவுகளை சுமுக­மாக்குவதற்கு எதிராக அந்நாட்டில் ஆர்ப்­பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இட்லிப், அல் பாப், அஸாஸ், அப்ரின் முத­லான நகரங்களில் இத்தகைய ஆர்ப்பாட்­டங்கள் நடைபெற்றுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »