Our Feeds


Monday, May 22, 2023

ShortTalk

போலிக் கடவுச்சீட்டில் வந்தவர்களை அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்த இராஜாங்க அமைச்சர்!



போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற சீனப் பிரஜை ஒருவரும், அவரது   எகிப்திய நண்பர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் எழுத்துமூல கோரிக்கையின் பேரில் குடிவரவு அலுவலக அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த வியாழன் இரவு 09.50 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-648 இல் இந்த  சீன,  எகிப்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.


 இந்த குழுவின் தலைவரான சீன நாட்டவர், ஆப்பிரிக்காவின் "கினி " நாட்டிலிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வழங்கினார். டுபாயில் இருந்து கட்டுநாயக்காவிற்கு பயணிப்பதற்கும் இதே கடவுச்சீட்டை அவர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடவுச்சீட்டு பக்கம் மாற்றப்பட்டு போலியானது என தெரியவந்ததையடுத்து விமான நிலையத்தில் இவர்கள் மோசமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.


அங்கு குடிவரவு அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் அதிகாரிகள் இணைந்து மூவரையும் கட்டுப்படுத்தி, நாடு கடத்துவதற்காக விமான காத்திருப்பு அறைக்கு திருப்பி அனுப்பினர்.


அதன் போது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு செல்வாக்குமிக்க நபர்களிடம் இருந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதுடன், இந்த பயணிகளும் இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பின்னர், அவர்கள் முதலீட்டாளர்கள் குழுவாக இருப்பதால், அவர்களை விடுவிக்குமாறு, சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர், குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


அதன்படி, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் இந்த இரு சீன மற்றும் எகிப்திய பிரஜைகளை விடுவித்துள்ளார்.

 

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவது குறித்து, குடிவரவு அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர்.


இந்த விடயத்தில் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தலையிட்டிருப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »