உடப்பு முதலாம் வட்டாரத்தில் வசித்து வந்த செல்வி.சண்முகம் கேதிஷா என்ற (17வயது) மாணவி தனது சக தோழிகளுடன் புளிச்சாக்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றில் நீராடிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவர் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 12ந் தரத்தில் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பகல் வேளை சக தோழிகளுடன் இவர் நீராடியுள்ளார். திடிரென குளத்தில் ஆழமான பகுதியில் மூழ்கவே அயலவர்களின் உதவியை நாடிய போது,சக தோழிகளான நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.இவரைத் தூக்கிய போதும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.மேலதிக விசாரணைகளை முந்தல் போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.