Our Feeds


Thursday, June 22, 2023

ShortNews

அதிகரிக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை - கராபிடிய வைத்தியசாலைக்கு மட்டும் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை!



காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


வைத்தியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தாலும், தற்போது 460 வைத்தியர்களே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சில வைத்தியர்கள் வெளிநாடு சென்றதே இதற்குக் காரணம் என அந்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் குறிப்பிட்டார்.


வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை அறை மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை திறக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »