இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எவ்) அதிகாரி நேதன் போர்ட்டர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைக்கு ஐஎம்எவ் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் அளிக்க வேண்டும். எதிர்வரும் ஜூலை மத்தியில் இந்த அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவி;ததுள்ளார்.
பாகிஸ்தானில் அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் பெரும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இறக்குமதிகளுக்குத் தேவையான அந்நிய செலாவணி பற்றாக்குறையை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு 6.5 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு 2019 ஆம் ஆண்டு இணக்கம் காணப்பட்டிருந்தது. சுமார் 4 பில்லியன் டொலர்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அந்த உடன்படிக்கையின் கீழ் இறுதிக்கட்டத் தொகையான 2.5 பில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு கடந்த நவம்பரிலிருந்து பாகிஸ்தான் காத்திருந்தது.
அந்த உடன்பாடு இன்று வெள்ளிக்கிழமையுடன் காலாவதியாகிறது.
இந்நிலையில், 3 பில்லியன் டொலர்களை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கான புதிய உடன்படிக்கைக்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
இந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் மத்திய வங்கி வட்டிவீதத்தை 22 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
