பிரான்ஸில் 17 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ்
அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்.பாரிஸின் புறநகரான நான்டரேவில், கடந்த செவ்வாய்க்கிழமை நகரில் போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது சிறுவன் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தான்.
அல்ஜீரிய, மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த நாஹெல் எம். எனும் சிறுவனே சுட்டுக் கொல்லப்பட்டுளளான்.
இச்சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் எண்ணிக்கையான கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் தொடர்பில் 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்படி சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி இச்சம்பவத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
இச்சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் விளக்கப்பட முடியாததும் மன்னிக்கப்பட முடியாததுமாகும் என பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் கூறியுள்ளார். எனினும், இச்சம்பவத்தை தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
