Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

காலாவதியான லைசன் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!



காலாவதியான சாரதி அனுமதி பத்திர உரிமம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காலாவதியான சாரதி அனுமதி பத்திர உரிமத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையால் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர உரிமங்கள் பாதுகாப்பு குறியீடு ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »