Our Feeds


Wednesday, June 21, 2023

SHAHNI RAMEES

நடாஷா விளக்கமறியலில் : புருனோவுக்கு பிணை..!

 

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் நடாஷா எட்ரிசூரிய எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

அவரது பிணை கோரிக்கையை நிராகரித்து கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

அத்துடன் யூடியூபில் தனது அறிக்கையை வெளியிட்ட புருனோ திவாகரவை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் 50,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

 

அத்துடன், மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்ட வணக்கத்திற்குரிய ராஜாங்கனை சத்தரத்ன தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »