Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்! - யார் அவர்?



புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவருக்கு அரசாங்கம் மூன்று மாத சேவை நீடிப்பை வழங்கியது.

 

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.

 

இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடம் வினவிய போது, ​​பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரி தொடர்பில் ஜனாதிபதி வருகை தந்த பின்னர் அவருடன் கலந்துரையாடி ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி செய்த பரிந்துரை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

தற்போதைய பொலிஸ் மா அதிபர். சி.டி. விக்ரமரத்ன இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபர் ஆவார். அவர் நவம்பர் 27, 2020 அன்று அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »