Our Feeds


Friday, June 30, 2023

SHAHNI RAMEES

சிங்கராஜ வனத்திலிருந்து உயிரினங்கனை கடத்த முயற்சி - மூவர் கைது

 

சிங்கராஜ வனத்திலிருந்து சட்டவிரோதமாக உயிரினங்களை எடுத்துச் செல்ல முயற்சித்த ஈரானிய பிரஜைகள் மூவரும் இலங்கை பிரஜையொருவருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவர்களிடமிருந்து சில அரியவகை உயிரினங்களும் மூலிகை வகைகளும் மீட்கப் பட்டுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.



சிங்கராஜ வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இவர் கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப் படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »