Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

VIDEO: பெண் காதி நியமனம் பற்றிய உலமா சபையின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை - மு.க தலைவர் ஹக்கீமின் ShortNews பேட்டிக்கு ACJU பதில்!

 


பெண்களை காதிகளாக நியமிப்பது தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாடு பற்றி முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவூப் ஹக்கீம் அவர்கள் வெளியிட்ட காணொளிக்குத் தெளிவுகோரி ஜம்இய்யா கடிதமொன்றை அவருக்கு அனுப்பி வைத்திருந்தது. அதனைக் கவனத்திற்கொண்டு கடந்த 19.06.2023ம் திகதியன்று 'ஷோர்ட் நிவ்ஸ்' எனும் யூடியூப் தளம் ஊடாக மற்றொரு நேர்காணலை அவர் வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணலில் 'ஜம்இய்யா மார்க்க விவகாரங்களுக்கான உச்ச ஸ்தாபனமாகும். அதனைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு துணைபோகக் கூடாது. மாறாக அதனைப் பலப்படுத்த வேண்டும்' என்ற அவரது நிலைப்பாட்டை முன்வைத்தமைக்கு ஜம்இய்யா தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.


முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பில் ஜம்இய்யா சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குத் தெளிவு வழங்க வருகை தந்திருந்த ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்ஷைக் முர்ஷித் முழப்பர் அவர்கள், 'பெண்களை காதிகளாக நியமிக்க முடியாது' என்ற ஜம்இய்யாவின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த விடயத்தையும் தாங்கள் குறித்த நேர்காணலில் கூறியிருந்தீர்கள். இதன் மூலம் பெண்களைக் காதிகளாக நியமிக்கும் விடயத்தில் ஜம்இய்யா அன்று முதல் இன்று வரை ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது என்பது மேலும் தெளிவாகிறது. அத்துடன், 'ஜம்இய்யா தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக தான் கூறியது தனது புரிதலில் ஏற்பட்ட தவறாக இருக்குமோ' என அவர் கூறியதன் மூலம் அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.


எனவே பெண்களை காதிகளாக நியமிப்பது தொடர்பில் ஜம்இய்யாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என்பதை ஜம்இய்யா மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கிறது.


எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவரையும் அவனது தீனின் பாதுகாவலர்களாக ஆக்கியருள்வானாக.


ஊடக அறிக்கை
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


மு.க தலைவர் ரவுப் ஹக்கீமின் பேச்சுக்கு உலமா சபையின் விளக்க பதில்.



உலமா சபையுடனான சந்திப்பில் நடந்தது என்ன? - மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் விளக்கம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »