இந்துக்களுக்கு இடையிலான மாபெரும் சமர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 12வது தடவையாக இம்முறை கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்றைய தினம் ஆரம்பமானது.
இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை துடுப்பெடுத்தாட அழைத்திருந்தது.
அந்த வகையில், திறமையான பல வீரர்களைக் கொண்ட இந்த இரு அணியினரும் தங்களது கிரிக்கெட் பல பரிட்சையை பார்த்துக் கொள்ளும் முகமாக போட்டியை மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்தார்கள்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிரிக்கெட் ஆதரவாளர்கள் என பல ரசிகர்கள் மைதானத்தில் நிறைந்து இருந்ததை காணக்கூடியதாய் இருந்தது.
பப்பரே மேளங்கள் முழங்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் செய்தபடி இரு அணியினரையும் உற்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் இன்று மாலை வரை இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்று நாளை இறுதி தினத்தில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் வெற்றி தோல்வியினை இரு அணிகளும் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
