போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக இலங்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கைகளை மேற்கொள்காட்டி ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் கோர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் அத்தியட்சகர் இதனை கூறியுள்ளார்.
மேற்படி விடயங்களை மேற்கொள்காட்டி அவர் எளிதில் தஞ்சம் கோரலாம் மற்றும் தனது குடும்பத்துடன் அவர் இங்கிலாந்திலே தங்கலாம் எனவும் தெரிவித்தார்.
மத நல்லிணக்கம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து மற்றும் பணமோசடி சம்பந்தமான குற்றச்சாட்டுகளின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு முன்னதாக சிங்கப்பூருக்கு சென்றார்.
மேலும் அவர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
