Our Feeds


Tuesday, July 4, 2023

ShortNews

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து அரசாங்கத்திற்கு எதிரான சுவரொட்டிகள் மீட்பு



கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அறையொன்றில் அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பல சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை கைப்பற்றியுள்ளதாக மருதானை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானவின் அறிவித்தலின் பேரில் குறித்த ஆவணங்கள்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். .

 

அந்த அறையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய 136 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் இருந்ததாக தெரிவித்துள்ள மருதானை பொலிஸார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »