Our Feeds


Tuesday, July 4, 2023

ShortNews

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல் - மொஸ்கோ விமான நிலையத்தை மூடியது ரஷ்யா!



மொஸ்கோ விமானநிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து  மொஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


உக்ரைன் மொஸ்கோ விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள ரஸ்ய அதிகாரிகள் இதன் காரணமாக நாட்டின் மிகப் பெரிய விமான நிலையத்தை தற்காலிகமாக மூடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்கிழமை தாக்குதலில் ஐந்து ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக  ரஸ்யா தெரிவித்துள்ளது.

அனைத்து ஆளில்லாவிமானங்களையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக  ரஸ்ய பாதுகாப்புஅமைச்சு தெரிவித்துள்ளது.உயிரிழப்புகள் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன் இந்த தாக்குதலிற்கு பொறுப்பேற்கவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »