Our Feeds


Sunday, July 2, 2023

ShortNews

PHOTOS: சாராயக் கடை வேண்டாம் - டயகம நகரில் 16 தோட்டங்களை சேர்ந்த மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்.



டயகம நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டயகம நகரில் மூன்று மதுபான சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் நான்காவதாக ஒரு மதுபான சாலை ஆரம்பிக்கப்படுவது அநாவசியன ஒன்றாக இருக்கின்ற அதே வேளையில் இந்த பிரதேச மக்களை பள்ளத்தில் தள்ள எதிர்பார்க்கும் செயற்திட்டமென்று விசனம் தெரிவிக்கின்றனர்.


கருப்பு கொடி கட்டி, கைகளில் பதாதைகள் ஏந்தி பொது மக்களும் மாணவர்களும் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதே நேரத்தில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். டயகம நகரில் 200 மீட்டருக்கு ஒரு மதுபான சாலை அமைக்கப்படுவது குறித்து பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வீயோரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மதுபான சாலைக்கு அருகில் லயன் குடியிருப்புகள் காணப்படுகின்றன. அதில் 200க்கும் அதிகமானோர் வசித்து வரும் சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களும் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


குறித்த மதுபான சாலை வேலையை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்தும் படி இங்குள்ள பொதுமக்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்படட்டுள்ளனர். 


இன்று மதியம் டயகம நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் மேற்கு 3ம் பிரிவில் இருக்கும் வைத்தியசாலை வரை சென்று மீண்டும் நகரத்தை வந்தடைந்த போராட்டக்காரர்கள் மதுபான சாலை அருகில் கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


இப்போராட்டத்தில் மத குரு தலைவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள், வர்த்தகர்கள் என பலரும் இணைந்துக்கொண்டனர்.


(ராசையா கவிஷான்)










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »