தாய்லாந்திலிருந்து நன்கொடையாக இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற “முத்துராஜா” என்றழைக்கப்படும் “சக்சுரீன்” என்ற யானை இன்று (02) காலை மீண்டும் தாய்லாந்தை நோக்கி கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.
முத்துராஜாவை ஏற்றிச் செல்லும் விமானம் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தினூடாக தாய்லாந்தை நோக்கி புறப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்த விசேட பயணிகள் விமானத்தினூடாக இந்த யானை மீண்டும் தாய்லாந்தை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளாா்.
இந்த பயணத்துக்காக தாய்லாந்திலிருந்து விலங்கு வைத்தியர்கள் மூவர், யானை பாகன் ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவரும் நாட்டுக்கு வருகைத் தந்திருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த விமான பயணத்துக்காக தயாரிக்கப்பட்ட விசேட கூட்டுக்கு பழக்கப்படுத்துவதற்காக முத்துராஜாவுக்கு ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டதாகவும் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளாா்.
2001 ஆம் ஆணடு சக்சுரீன் என்ற யானை தயாலாந்து அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், யானையின் உடல் நலம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வந்தமையின் காரணமாக, மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
"Muthuraja" leaves : The Thai tusker gifted to Sri Lanka in 2001 is on his way back to a sanctuary in Thailand where it will receive medical treatment after animal rights activists raised the alarm that the elephant was being mistreated pic.twitter.com/qfGk2z5PWV
— Azzam Ameen (@AzzamAmeen) July 1, 2023
